177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
வெள்ளைவான் கடத்தல்கள் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக கடமையாற்றிய போதிலும் வெள்ளைவான்களில் எவரும் கடத்தப்பட்ட விடயங்கள் பற்றி தெரியாது எனவும் வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஒருவரை காண்பிக்குமாறும் அவர் ஊடகவியலாளர்களிடம் கோரியுள்ளார்.
லசந்த கொலை, பிரகீத் காணாமல் போன சம்பவம் உள்ளிட்டன தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சி பலவீனமாகவே காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love