மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில், தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால், 2018-ம் ஆண்டை வரவேற்றுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக், மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை, பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி, மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார்.
தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்ப கலைஞராக திகழும் இவர், சர்வதேச அளவில் பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். இந்தநிலையில் புத்தாண்டையொட்டி பூரி கடற்கரையில் 30 அடி உயர ஜெகநாதர் சிற்பத்தை நேற்று உருவாக்கிய அவர் இந்த சிற்பத்தின் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் 2018-ம் ஆண்டை பூரி கடற்கரையில் தனது எழில்மிகும் மணல் ஓவியத்தால் வரவேற்றுள்ளார். இந்த இரு ஓவியங்களையும் ஒடிசா மக்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மக்களும் கண்டு களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.