சென்னையில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்கள், முதியோருக்கான குத்தகை விடுதிகள், வாடகை விடுதிகள் மற்றும் நேரடி விற்பனையில் முதியோர்களுக்கு வழங்கப்பட்ட இல்லங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல விதிகள் சட்டத்தின்; கீழ் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அதேபோல, பெண்கள் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 10 பேருக்கு மேல் பணிபுரியும் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் பாலியல் வன்முறை சட்டம் 2013-ன் கீழ் கட்டாயமாக தங்கள் அலுவலகங்களில் உள் புகார் குழுக்ள அமைத்து அதன் விவரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறிக்கையாக தர வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தக் குழுவில் சமூக பணியில் அனுபவம் அல்லது சட்ட அறிவு பெற்ற பணியாளர்கள் இருவரும், மகளிர் நலனுக்கான தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் குழுவில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காலாண்டிற்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது