188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2018 – 2019ம் ஆண்டுகளில் நாடு என்ற ரீதியில் பாரியளவில் கடன் சுமை காணப்பட்டாலும் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான செலவுகள் குறைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் என்பது தொடர்பில் செய்யப்படும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love