இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளனர். பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவரான இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பொதுநலவாய நாடு என்ற வகையில் இலங்கையுடன் காணப்படும் தொடர்புகளை பலப்படுத்துதல் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் இந்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜனநாயகத்தை பலப்படுத்துதல், பொருளாதார அபிவிருத்தி, விசேட அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் விசேட வர்த்தக துறைகளில் இலங்கை கடந்த காலத்தில் முன்னெடுத்த செயற்திட்டங்களில் அதிக முன்னேற்றத்தினை அவதானிக்க முடிந்துள்ளதாக அக்குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.