சவூதி அரேபியாவில் மன்னரின் அரண்மனையின் முன்பாக போராட்டம் மேற்கொண்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விலகச் சொல்லி காவல்துறையினர் கோரியும் அதனைர் பொருட்படுத்தாது அவர்கள் போராட்டம் மேற்கொண்டதனால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர்களின் போராட்டத்துக்கான காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படாத போதும் இளவரசர்களுக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை அரசு செலுத்துவது நிறுத்தப்படும் என சவூதி அரசர் தெரிவித்திருந்தார். இந்த அறிவித்தலை மீளத் திரும்பப் பெறக் கோரியும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற இளவரசர் ஒருவருக்கு நட்டஈடு வழங்கக் கோரியுமே போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டுமுதல் மன்னர் சல்மான் பின் அப்துலஜீஸ் அல் சவுதாலாலினால் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதனை அடுத்து 11 சிரேஸ்ட இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழிலதிபர்கள் உட்பட 38 பேர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.