இந்தியாவின் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலில் யாராவது போட்டியிட்டால் அவர்களது கண்களில் அசிட் வீசுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர் .
காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா, காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகின்றது. அங்கு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா முதலமைச்சராகவும் பா.ஜ.க.வைச் சேர்ந்த நிர்மல்குமார்சிங் துணை முதலமைச்சராகவும் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு அங்கு நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலை குழப்பிய ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் தேர்தலில் போட்டியிட்ட சிலரை சுட்டுக்கொன்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரில் மீண்டும் உள்ளாட்சி தேர்தலை அடுத்த மாதம் நடத்த அரசு திட்டமிட்டுள்ள நிலையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.