Home உலகம்டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – மூவர் காயம்

டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – மூவர் காயம்

by admin

 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டிடத்தில் டிரம்ப்புக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பல முன்னணி நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்மாடி பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை முழுமையாக அணைத்து கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் எதுவென்பது கறித்த தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More