194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய படையினரின் தாக்குதல்கள் காரணமாக ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய நிலையான இட்லிப்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் முக்கிய நிலைகளில் ஒன்றாக இட்லிப் கருதப்படுகின்றது.
கடந்த நவம்பர் மாதம் முதல் இட்லிப் மீது படையினர் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களினால் அப்பாவி சிவிலியன்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வடமேற்கு சிரியாவில் மட்டும் 1.16 மில்லியன் மக்கள் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love