நொட்டிங்ஹாம் ரயில் நிலையத்தில் உள்ளூர் நேரம், இன்று காலை 6.60 பாரிய தீ ஏற்பட்டதுஇந்தத் தீயை கட்டுப்படுத்த 10 வரையிலான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
இன்று ) காலை இத்தீ பரவல் ஏற்பட்டிருந்த நிலையில் ரெயில் நிலையப் பகுதி புகையினால் சூழப்பட்டிருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தீ விபத்தை தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன், நொட்டிங்ஹாம் ரயில் நிலையத்தினூடான அனைத்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பல வீதிகள் முடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழமை நாட்களில் தினசரி, ஏறத்தாள 4600 பயணிகள் காலை 7 மணிமுதல் 10 மணிவரை இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் நிலையில் பயனிகள் எவருக்கும் ஆபத்து ஏற்படாது நிலமை கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குறித்த பகுதியூடான போக்குவரத்தை தவிர்க்குமாறு நோட்டிங்ஹாம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.