“எனது பதவியை எப்போது வேண்டுமானாலும் துறக்கத் தயாராகவே இருக்கிறேன். தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் வரையறை குறித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்று வழங்கவுள்ள உத்தரவை மனதார ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன். எனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் உச்சத்தில் இருக்கும். ” என ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன தனது ருவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்தச் சட்டத்தின் பின் எழுந்துள்ள புதிய அரசியல் சூழலில், ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களா, அல்லது 5 வருடங்களா? என உச்ச நீதிமன்றிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விளக்கம் கேட்டிருந்தார். இது குறித்து பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு ஆராய்ந்து வருகிறது. இந்த வகையில் எதிர்வரும் ஒரு சில நாட்களில் பதவிக்காலம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.