குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் தாக்குதல் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் லாஸ் வேகாஸில் கொடூரமான தாக்குலொன்று நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
துப்பாக்கி ரவைகள், ஆயுதங்கள் கொள்வனவு செய்வது குறித்து இந்த தாக்குதலை நடத்தியவர் சில மாதங்களுக்கு முன்னதாகவே தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளார். மின்னஞ்சல் ஊடாக இவ்வாறு தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீபன் பெட்லொக் என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
எனினும், தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த நபரும் தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதுல் தொடர்பான பல்வேறு தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.