158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையின் பிரதி தம்மிடம் உள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதியிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.
இந்த விசாரணை அறிக்கையின் பிரதியொன்றே இவ்வாறு தம்மிடம் உள்ளது என ரவி கருணாநாயக்க சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love