அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 13 குழந்தைகளை அறை ஒன்றில் அடைத்துவைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டள்ளனர். கலிபோர்னியவைச் சேர்ந்த 57 வயதான டேவிட் அலன் ரேபின் (David Allen Turpin) மற்றும் 49 வயதான லூயிஸ் அன்னா ரேபின் (Louise Anna Turpin) என்னும் தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது மகள்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து தப்பி வந்து காவல்துறையினரிடம் முiறியட்டதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தன்னையும் 13 சகோதரர்களை ஒரு அறையில் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாகவும் தம்மைக் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் பெற்றோரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் நிறைந்த அறையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 குழந்தைகளை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்