குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றையதினம் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
குறித்த விசேட குழு கூட்டத்தில் இது தொடர்பில் பிரதமருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த விசேட குழு கூட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் மற்றும் கிராமிய மட்ட பொருளாதார நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதுடன், தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடு குறித்தும் ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐ.தே.கவின் முக்கிய கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது…
Jan 17, 2018 @ 04:15
ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தின் போது உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் மற்றும் கிராமிய மட்ட பொருளாதார நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. அத்துடன், தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடு குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக, கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.