141
வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இருவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. புது வருட தினத்தின் போது வாழ்த்து தெரிவிப்பதற்காக விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்தியமைக்காகவே குறித்த இரண்டு பேரையும எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love