இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற பின், குற்றவாளிகளுக்கு எதிரான என்கவுன்ட்டர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இதுவரை 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்த காவல்துறையினருக்கும் கொள்ளைக்கும்பலுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாதவ் பரத்வாஜ் என்ற 8 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.