Home சினிமாவிஜய்யின் அடுத்த படம் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்துடனா?

விஜய்யின் அடுத்த படம் தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத்துடனா?

by admin


நடிகர் விஜய் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் வினோத்தை அழைத்துப் பேசியுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. இதனால் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவான படம் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டித் தப்பிக்கும் ஒரு கொள்ளைக் கும்பலைப் பிடிக்கும் காவல்துi அதிகாரியின் கதை அழுத்தமுமாகச் சொல்லப்பட்டிருக்கும்

இந்நிலையில அண்மையில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்த்த விஜய், இயக்குநர் வினோத்தை அழைத்துப் பேசியதாகவும் தீரன் அதிகாரம் ஒன்று படம் குறித்தும், அதன் திரைக்கதை குறித்தும் சிலாகித்துப் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம், நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள் என விஜய் தெரிவித்ததாகவும் இதனால் விஜய்க்கான கதையை உருவாக்குவதில் வினோத் கவனம் செலுத்தி வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More