157
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவை கைதுசெய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள இரவு நேர விடுதி ஒன்றில் பிரித்தானிய பிரஜை ஒருவருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் மாலக சில்வா நீதிமன்றில் முன்னிலையாததன் காரணமாகவே இவ்வாறு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அததுடன் குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Spread the love