கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் சுயேட்சைக் குழுவாக கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எங்களது சுயேட்சைக் குழுவின் சின்னம் கேடயம் என்பது மக்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் எமது சின்னத்தை மாற்றி போலி வாக்குச் சீட்டு ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல்சட்ட விதிமுறை மீறல் இது தொடர்பில் கிளிநொச்சி உதவி தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் வட்டாரத்தில் ஸ்கந்தபுரம் கிராமத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற போது சட்டத்திற்கு புறம்பாக மாதிரி வாக்கு சீட்டுக்களை மக்களிடம் விநியோகித்துள்ளனர்.
இதில் கரைச்சி பிரதேசத்தில் ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழவான எங்களுடைய சுயேட்சைக்குழுவும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் ஏனைய எல்லா கட்சிகளினது சின்னத்தை சரியாக அச்சிட்டு தங்களுடைய வீட்டுச் சினத்திற்கு புள்ளடியிட்ட வாக்கு சீட்டை விநியோகித்துள்ளனர்.
இதில் வேண்டுமென்றே எங்களுடை கேடயச் சின்னத்திற்கு பதிலாக வெற்றிக் கிண்ணத்தை அச்சிட்டு போலி மாதிரி வாக்குச் சீட்டை வழங்கி மக்களை குழப்பும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்த அவர் எங்களுடை வெற்றிக்கண்டு அச்சமடையும் இவர்களே இவ்வாறு கீழ்த்தரமான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளனர்எனவும் தெரிவித்தார்
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது
குறித்த முறைப்பாடு தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் மாதிரி வாக்குச் சீட்டுக்கள் அச்சிட்டு வெளியிடுவது தேர்தல் சட்டத்திற்கு முரணானது இது தொடர்பில் விசாரித்து வருகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்