குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி புதுமுறிப்பு பாலா கடை சந்தி பகுதியில் நேற்று(18) பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தவிபத்தில் செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிம் தியாகராசா வயது 28 என்பவரே பலியாகியுள்ளார்
உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு ஒரு உந்துருளியில் தலைக் கவசம் இன்றி பயணித்த மூன்று இளைஞர்கள் பிரதான சந்தியில் பேரூந்தின் பின்பக்கமாக வீதியில் ஏற முற்பட்ட போது உழவு இயந்திரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த இளைஞர்கள் தலைக் கவசம் அணிந்து உந்துருளியில் பயணித்திருந்தால் இறப்பை தடுத்திருக்க முடியும் எனவும் விபத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.