Home இலங்கைபிரதமருக்கு எதிராக வழக்குத் தொடர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்

பிரதமருக்கு எதிராக வழக்குத் தொடர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்குத் தொடர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம் எடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தொடர்புடையவர்களுக்கு எதிராக தனிப்பட்ட ரீதியில் வழக்குத் தொடர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முன்னதாக கூட்டு எதிர்க்கட்சித் திட்டமிட்டிருந்த போதும் தற்போது இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாகவும், பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வழக்குத் தொடர்வது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More