177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொருளாதாரம், சமூகம், அரசியல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு உள்ளிட்ட சில முக்கிய பொறுப்புக்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடுமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Spread the love