175
தென்கொரியாவின் மிர்யாங் நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதய நோய் சிகிச்சை அறையில் பற்றிய தீ வைத்தியசாலையின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிபத்து ஏற்பட்ட சமயத்தில் வைத்தியசாலையில் 200 பேர் வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 33 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை மேலும் பலர் வைத்தியசாலையில் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love