169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
நல்லாட்சியில் புத்தர் சிலை உடைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டு வருவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்குவதற்கு ஏனைய மதத் தலைவர்களும் இணங்கியுள்ளதாகவும் பௌத்த சிலைகளை வைத்திருப்பதனால் நல்லாட்சிக்கு பாதிப்பு வராது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love