குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு சட்டம் தெரியவில்லை என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் அர்ஜூன் மகேந்திரன் குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது எனவும் இவ்வாறு உச்ச நீதிமன்றினால் குற்றமற்றவர் என கூறப்பட்ட ஒரு நபருக்கு கோப் குழுவின் மூலம் தண்டனை விதிக்கப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்ட நிபுணரான ஜீ.எல்.பீரிஸ், அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பும் போது கைது செய்ய வேண்டுமென கோரியதன் ஊடாக சட்ட விடயங்களில் தமது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் குற்றமிழைக்கவில்லை எனவும் அவரை ஊடகங்களே குற்றவாளியாக காண்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.