குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவைப் போன்றே சீனாவும் அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீ.ஐ.ஏ இன் பணிப்பாளர் மைக் பொம்பேமோ (Mike Pompeo ) தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகள் மீதான சீனாவின் தாக்கம், ரஸ்யாவின் நடவடிக்கைகளுக்கு நிகரானதாக நோக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவை விடவும், சீனாவிற்கு அமெரிக்கா மீது தாக்கத்தை செலுத்துவற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தகத் தகவல்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகளின் தகவல்கள் போன்றன களவாடப்படுவதாகவும், இந்த தகவல் திருட்டு ஐரேர்ப்பிய நாடுகளுக்கும் வியாபிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். யேமன் கிளர்ச்சியாளர்களைக் கொண்டு ஈரான், சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவ ர் தெரிவித்துள்ளார்.