192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது காயத்தை ஆறவிடாது அதனை காட்டியே பிச்சை எடுக்கும் ஏமாற்று பிச்சைகாரர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அந்த பிச்சைகாரர்களிடம் தொடர்ந்து ஏமாற கூடாது. என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். ஆம் அதனை வாங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு நிதியினையும் செலவு செய்து விட்டனர். ஆனால் எந்த திட்டத்தினையும் நடைமுறைப்படுத்த வில்லை. வடக்கு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர்.
பிச்சை எடுப்பவர்கள் தமது காயத்தை ஆற விடாது வைத்து , அதனை காட்டி பிச்சை எடுப்பது போன்று செயற்பட வேண்டாம் .அவ்வாறு ஏமாற்ற வேண்டாம். அவ்வாறு ஏமாற்றும் பிச்சைகார்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருந்து அந்த ஏமாற்று காரகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பொய் சொல்லி ஏமாற்ற வேண்டாம். வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நாம் இனவாதிகள் அல்ல . எனது நெருங்கிய உறவினர் தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்துள்ளார் என மேலும் தெரிவித்தார்.
Spread the love