இந்தியாவின் உத்தரப் பிரதேச காவல்துறையினர் 48 மணித்தியாலத்தில் குறைந்தது 18 என்கவுண்டர்களை நடத்தியுள்ளமை தொடர்பில மனித உரிமை ஆணையகம் விளக்கம் கோரியுள்ளது. குற்றவாளிகளை கட்டாயம் கைது செய்தாக வேண்டும் என்ற நிலையில் தாங்கள் தற்காப்புக்காகவே சுடுகிறோம் என புதிதாக நியமிக்கப்பட்ட டிஜிபி ஒ.பி.சிங்எ ன்கவுண்டர்களை நியாயப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவியேற்ற ஓராண்டுக்குள் சுமார் 950 என்கவுண்ட்டர்கள் நடைபெற்றுள்ளதுடன் 200 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனதாகவும் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மனித உரிமை ஆணையகம் தாமாகவே முன்வந்து இந்த என்கவுண்ட்டர்கள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதுஇ அத்துடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.