262
பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள சிரேஸ்ட நகைச்சுவை நடிகை பிந்துகோசுக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நிதி உதவி வழங்கியுள்ளார். மருத்துவ உதவி இல்லாமல் பிந்துகோஷ் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் வந்த செய்தியை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை மூலம் உடனடி நிதி உதவியாக 5 ஆயிரம் ரூபா வழங்கியுள்ளதுடன் தொடந்து மாதந்தோறும் 2500 ரூபா உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love