157
எல்லைதாண்ட வந்ததாக தெரிவித்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 113 தமிழக மீனவர்களை விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு உத்தரவின் நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 4 மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒருவரின் மகன் இறந்துவிட்டதால் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏனைய 109 மீனவர்கள் வழக்கமான நடைமுறைகளின்படி விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
Spread the love