178
மணிரத்னத்தின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் ஆகியோர் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இந்தப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள நிலையில் படத்தின் பெயர் ‘செக்கச் சிவந்த வானம்’ என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சிம்பு, ஃபஹத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அருண் விஜய் ஆகியோர் மணிரத்னத்துடன் முதல்முறையாகக் கை கோர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love