இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் குறித்து நடத்திய ஆய்வில் 11 முதலமைச்சர்கள் மீது பாரிய குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 31 மாநில முதலமைச்சர்கள் உள்ள நிலையில் இவர்களின் கல்வி தகுதி , சொத்துக்களின் பெறுமதி மற்றும் இவர்கள் மீது காவல்துறையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன போன்றவை குறித்து ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் சில முதலமைச்சர்கள் பற்றிய வெளிவந்துள்ள தகவல்களில் 11 முதலமைச்சர்கள் மீது பாரிய குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது பாரிய குற்றச்செயல்கள் உள்ள முதலமைச்சர்களின் பட்டியலில் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முதலிடத்தில் உள்ளார்.