யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் மூவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை திருநெல்வேலி நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் நகையை பறித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் நாவற்குளி பகுதியைச்சேர்ந்த இருபதிலிருந்து இருபத்து மூன்று வயதுக்கிடையிலான குறித்த மூவரும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புபட்டிருப்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகள் சிலவும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.