Home உலகம் “எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது”

 “எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது”

by admin

 “எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அமெரிக்காவை உலுப்பிக்கொண்டு இருக்கிறது.  குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன.

அண்மையில்  ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறியிருந்தார். இப்போது இன்னொரு பெண் தனது தொடர்புபற்றி தெரிவித்திருக்கிறார். பிளேபோய் இதழின் முன்னாள் மொடல் அழகியான நியூயார்க்கைச் சேர்ந்த கரேன் மெக்டோகல், தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே 2006ம் ஆண்டு உடல் ரீதியான நெருக்கமான உறவு இருந்ததாக கூறியுள்ளார்.

டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு குழந்தை பிறந்த சில மாதங்களில் இந்த உறவு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர், மெக்டோகலின் கூற்று பொய்யானது, போலியானது என்று அதிபர் டிரம்ப் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த உறவு உண்மையானது என்று கூறியுள்ள கரேன்,  9 மாதம், நெருக்கமாக இருந்ததாகவும்,  பின்னர் அந்த உறவு அப்படியே மெல்ல கரைந்து போனது என்றும்  கூறியுள்ளார். கரேன் சொல்லும் அதே காலகட்டத்தில்தான் தன்னுடன் டிரம்ப் இருந்ததாக ஸ்டெபானியும் கூறியிருந்தார். அப்படியானால் ஒரே நேரத்தில் இந்த இருவருடனும் டிரம்ப் நெருக்கமான உறவை பேணி வந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More