ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை எதிர்த்து நளினி தொடர்ந்துள்ள வழக்கிற்கு, இந்திய மத்திய அரசினை பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் மத்திய சிறையில் நளினி சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவர் தாக்கதல் செய்திருந்த மனுவில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து கடந்த முதலாம் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன்படி முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்கு போதிய அதிகாரம் உள்ளது.
ஆனால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவின்படி சி.பி.ஐ. விசாரித்த வழக்கு என்பதால் ஆயுள் தண்டனை பெற்ற தன்னை போன்ற கைதிகளை மத்திய அரசின் ஒப்புதல் பெறாமல் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையானது மாநில அரசின் இறையாண்மைக்கும், அதிகாரத்திற்கும் எதிராக உள்ளன.
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும்போது அவர்களின் நன்னடத்தை மற்றும் ஏற்கனவே அனுபவித்த தண்டனை காலத்தை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். மறுவாழ்வு அளிப்பதற்காகத்தான் கைதிகளை அரசு விடுதலை செய்கிறது. எனவே, கைதிகள் மத்தியில் இதுபோன்ற பாகுபாடுகளை பார்க்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்றையதினம்வந்துள்ள நிலையில் குறித்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு இந்திய மத்திய அரசின் சட்டமாஅதிபருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை மார்ச் 19ம் திகதிக்கு ஒத்திவைத்தது