இலங்கைப் படையதிகாரி லெபானானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்த எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். ரத்னபுளி வசந்த குமார ஹேவகே என்னும் படையதிகாரியே இவ்வாறு அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லெபானானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவிருந்த இலங்கை படையதிகாரியை அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது. இந்த அதிகாரி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகாரிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படக்கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பல கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது