Home இலங்கைதேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை…

தேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை…

by admin

தேசிய அரசாங்கத்திற்கு அன்று இருந்த பலம் தற்போது இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஹொரனை பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது நிலையற்று இருப்பதாகவும், நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா என்பது கூட தெளிவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பான எழுத்து மூல உடன்படிக்கை தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான உடன்படிக்கையை அவர்கள் வெளியிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ள மகிந்த இந்த அரசாங்கத்தால் கடந்த மூன்றாண்டுகளாக செய்ய முடியாதவற்றை இந்த ஆண்டில் எவ்வாறு செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More