பாம்பன் பாலத்தினை யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 1914-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாம்பன் புகையிரத பாலம் கட்டி முடிக்கப்பட்டு சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு புகையிரத போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்றது.
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இந்த பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளமுள்ளது. இப்பாலத்தை கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்தப்பாலத்தினை ஆங்கிலேய பொறியிலாளர் ஸ்கெர்சர் என்பவர் கட்டியதால் இந்த் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
1964–ம் ஆண்டு மார்கழி மாதம் வீசிய புயலில் துறைமுக நகரமான தனுஷ்கோடி முற்றிலும் அழிந்ததனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்து பின்னர் சீரமைக்கப்பட்டது.
இந்த பாம்பன் பாலத்தை அகல புகையிரத பாதையாக மாற்றும் பணி 2006-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதனால் இதனூடான போக்குவரத்து ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் 2007-ம் ஆண்டில் மீண்டும் ஆரம்பிக்க்பபட்டது பாம்பன் பாலம் கட்டப்பட்டு நூறாண்டுகள் கடந்ததை முன்னிட்டு கடந்த 2014-ம் ஆண்டு நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் நூறாண்டுகளை கடந்துவிட்ட இந்த புகையிரத பாலத்தை பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது00