Home இலங்கைஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

by admin

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது இன்று ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். கூட்டத்தெர்ரின் முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன், ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் முக்கிய உரைகளை ஆற்றவுள்ளனர். இதில், ஆணையாளரின் உரை இலங்கை தொடர்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் எதிர்வரும் 16ஆம் திகதியன்று நடைபெறுவதுடன் 21ஆம் திகதி இலங்கை குறித்த பிரதான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More