குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடனை திருப்பிச் செலுத்தாத செல்வந்தரின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்ய சவூதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல பில்லியன் டொலர்களுக்கு அதிபதியான மான் அல் சானியாவின் சொத்துக்களே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. அரசாங்க வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு அவற்றை மீளச் செலுத்தவில்லை என அல் சானியாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிகளை தடுக்கும் நோக்கில் கடந்த நம்பர் மாதம் முதல் சவூதி அரேபியாவின் முக்கிய பிரமுகர்கள் பலர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அல் சானியா பாரியளவில் அரசாங்கத்திற்கு கடன் செலுத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கடனை மீள அறவீடு செய்யும் நோக்கில் சானியாவின் சொத்துக்கள் மற்றும் கார்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
அல் சானி 2007ம் ஆண்டு போர்பஸ் சஞ்சிகையின் உலக 100 செல்வந்தர்கள் வரிசையில் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.