குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் நாள் தோறும் யுத்த நிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் காணப்படும் குவாட்டா பகுதியில் இவ்வாறு நாள் தோறும் யுத்த நிறுத்தமென்றை அமுல்படுத்துமாறு ரஸ்ய ஜனாதிபதி, தமது படையினருக்கு அறிவித்துள்ளார். இன்றைய தினம் முதல் மனிதாபிமான அடிப்படையில் இந்த யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த மனிதாபிமான அடிப்படையிலான யுத்த நிறுத்தம் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சுமார் நான்கு லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பகுதியில், கடந்த எட்டு நாட்களில் மட்டும் சுமார் 550 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய ஆதரவுடனான சிரிய அரச படையினர் கிளர்ச்சியாளர்கள் நிலைகள் மீது மிகக் கடுமையான குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு நேரப்படி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையில் நாளாந்தம் இந்த யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளது. எந்ததெந்த பகுதிகளின் ஊடாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியும் என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.