குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இதனைத் தெரிவித்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி. ரட்நாயக்க ஐக்கிய தேசியக் கட்சியினால் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதற்கு கூட்டு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் 53 உறுப்பினர்களும் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.