Home இலங்கைசம்பந்தரை நீக்கும்வரை ஓயமாட்டோம்..

சம்பந்தரை நீக்கும்வரை ஓயமாட்டோம்..

by admin

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை  பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  தொடர்ந்து போராடப் போவதாக .   கூட்டு எதிர்க்­கட்சித் தலை­வரும்    பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்துள்ளார்.

தமக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியைத் வழங்காமல்  சபா­நா­யகர் ஜன­நா­யக விரோ­த­மாக  செயற்­பட்­டுக்­கொண்டு வருகிறார் எனவும் தெரிவித்த அவர், அர­சாங்கம் மக்­களின்  ஆணையை  இழந்­துள்­ளமையால்,  உட­ன­டி­யாக   பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்தி புதிய ஆட்­சியை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.

அவர்  இது­தொ­டர்பில் மேலும் விப­ரிக்­கையில், “நாங்கள் அடுத்தகட்­ட­மாக  அர­சியல் ரீதியில் எவ்­வாறு செயற்­ப­டு­வது  என்­பது குறித்து  ஆராய்ந்து வரு­கின்றோம். குறிப்­பாக தேவை­யான நேரத்தில்  அவ­சி­ய­மான திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுப்போம். அதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். மக்­களின் ஆணை  மஹிந்த தரப்­பிற்கே கிடைத்­தி­ருக்­கின்­றது. எனவே   தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது.

இதே­வேளை “பாரா­ளு­மன்­றத்தில்   எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கூட்டு எதி­ர­ணிக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். சபா­நா­யகர் இந்த விட­யத்தில்   ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வேண்டும்.  பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின்படி    எண்­க­ணிதம்   கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும். எண்­க­ணிதம் என்­பது   இந்த   முழு உல­கத்­தி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு விட­ய­மாகும்.

எனவே  எண்­க­ணித ரீதி­யாக பார்க்கும் போது பாரா­ளு­மன்­றத்தில் கூட்டு எதி­ர­ணிக்கே   அதி­க­ளவு  எம்.பி.க்கள் இருக்­கின்­றனர். எனவே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கூட்டு எதி­ர­ணிக்கே வழங்­கப்­ப­ட­வேண்டும்.

தற்­போது  எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வகிக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பை­விட மூன்று  மடங்­கிற்கும் அதி­க­மான  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை  கூட்டு எதி­ரணி  வைத்­தி­ருக்­கின்­றது. எனவே இந்த விட­யத்தை கவ­னத்தில் கொண்டு சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை  கூட்டு எதிரணிக்கு வழங்க  நடவடிக்கை எடுக்கவேண்டும். எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்து செயற்படும் என்பதை  உறுதியாக தெரிவிக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More