குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பலவந்தமான அடிப்படையில் கடந்த வாரம் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டிருந்தார். சாந்தரூபன் என்ற புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போதும் உரிய முறையில் தமது புகலிடக் கோரிக்கையை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என சாந்தரூபன் தெரிவித்துள்ளார். நாடு கடத்தப்பட்டு இலங்கை சென்றடைந்ததன் பின்னர் விமான நிலையத்தில் வைத்தே சாந்தரூபன் கைது செய்யப்பட்டு நான்கு மத்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும், அடிக்கடி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி வருவதாகக் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சாந்தரூபனின் மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றிய விபரங்களும் திரட்டப்பட்டு வருவாகத் தெரிவிக்கப்படுகிறது.