Home இலங்கைபிரதமருக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராது – வசந்த சேனாநாயக்க

பிரதமருக்கு எதிராக ஐ.தே.க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வராது – வசந்த சேனாநாயக்க

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வராது என ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக எவ்வித நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வரும் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கட்சிக்குள் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உள்ளக ரீதியான தீர்வுத் திட்டங்கள் எட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக இன்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More