ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இன்று (09) இலங்கைக்கு செல்கிறார். இவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும், மதத்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜெஃப்ரி ஃபெல்ட்மன் கண்டிக்கு சென்று பார்வையிட உள்ளதுடன் அங்குள்ள மத தலைவர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
UN அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் Jeffrey Feltman இலங்கைக்கு பயணிக்கவுள்ளார்..
Published on: Mar 7, 2018 @ 04:39
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (Jeffrey Feltman ) இலங்கைக்கான பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள அவர் எதிர்வரும் 11ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பாhர் எனவும் இதன் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வன்முறைகளினால் இரண்டு பேர் கொல்லப்பட்ட கண்டிக்கும் செல்லத் திட்டமிட்டுள்ள ஜெப்ரி தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் இன வன்முறைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜொரிக் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணம் அவசரகாலச்சட்டம் அமுல்ப்படுத்துவதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டதாகவும் இலங்கைக்கு ஐ.நா வழங்குகின்ற ஒத்துழைப்புகளை அடிப்படையாகக் கொண்டது எனவும் ஸ்டீபன் டுஜொரிக் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்பொழுது நிலவும் அசாதாரண சூழலிலும் அவசரகாலச்சட்டம் மீண்டும் அமுப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஐ.நா. உதவிச்செயலரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.