திருச்சி திருவெறும்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கணவன் மனைவி இருவர் இருசக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த இரவு வேளை காவற்துறையினர் நிறுத்திய போது நிற்காமல் சென்ற அவர்களை ஒரு இருசக்கர வண்டியில் துரத்திச்சென்ற காவற்துறையினர் காலால் உதைத்ததுள்ளனர்.
இதில் 3 மாதக் கர்ப்பிணிப் பெண்ணான மனைவி தடுமாறி வீழ்ந்ததில் மரணமாகியுள்ளார். இதனைஅடுத்து சிறிது நேரத்தில் தஞ்சை திருச்சி நெடுஞ்சாலையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் வீதியை மறித்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 2 மணிநேரமாக போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. இந்தநிலையில் திருச்சி காவற்துறை துணை ஆணையர் சக்;தி கணேஸ் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட காவற்துறை சிப்பாய்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கிய போதும் சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை ஆவேசம் கொண்ட மக்கள் காவற்துறை வாகனங்களை தாக்கியதுடன் தடைகளையும் தகர்த்து எறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது