Home இலங்கைகர்ப்பிணி பெண் கொலை வழக்கினை குற்றபுலனாய்வு துறையினர் பொறுப்பெடுக்க வில்லை

கர்ப்பிணி பெண் கொலை வழக்கினை குற்றபுலனாய்வு துறையினர் பொறுப்பெடுக்க வில்லை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கினை இதுவரையில் குற்றபுலனாய்வு துறையினர் பொறுப்பெடுக்க வில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியலில் தடுத்து வைக்கபட்டு உள்ள இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கின் விசாரணையை கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்ற நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. எனினும் இதுவரையில் குற்றபுலனாய்வு பிரிவினர் விசாரணைகளை பொறுப்பெடுக்கவில்லை.

அந்நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த வழக்கினை பாரமேடுக்குமாறு காவல்துறை மா அதிபரிடம் இருந்து இதுவரையில் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெற வில்லை என மன்றில் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுவரையில் காவல்துறை மா அதிபரிடம் இருந்து குறித்த வழக்கினை பாரம் எடுக்குமாறு குற்ற புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் கிடைக்க பெறவில்லை என காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.

அதனை அடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More