குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எஸ். ஹாரீஸ், பாராளுமன்றில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.
முஸ்லிம்களை அரசாங்கம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஹாரீஸ் தெரிவித்திருந்தார். இந்த கூற்று தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமருக்கு எதிராக வாக்களிக்க நேரிடும் – ஹாரீஸ்
Mar 8, 2018 @ 03:09
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 21 முஸ்லிம் உறுப்பினர்களும் பிரதமருக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு முடியாவிட்டால், பிரதமருக்கு எதிராக வாக்களிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட வேண்டுமென பிரதி அமைச்சர் ஹாரீஸ் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறு பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளை அரசாங்கத்தினால் ஏன் தடுக்க முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ள அவர் கண்டியில் இடம்பெற்று வரும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.